வித்தியாசமான
வடிமவைப்பும், தொழில் நுட்பமும் எப்போதுமே வாடிக்கையாளர்களை
ஈர்த்துவிடும் என்பதற்கு இங்கே ஓர் சிறந்த உதாரணம் உருவாகி இருக்கிறது.
பேம்பூ அதாவது மூங்கிலினால் ஒரு புதிய மொபைல் வடிவமைக்கப்பட்டு
இருக்கிறது.
அட்ஸெரோ
என்ற இந்த புதிய பேம்பூ ஸ்மார்ட்போன் அமெரிக்காவில் அறிமுகம் செய்து
இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கெய்ரான் ஸ்காட் வுட்ஹவுஸ், இந்த
ஸ்மார்ட்போனை சீனா மார்கெட்டிலும் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறுகிறது.
வித்தியாசமாக
பேம்பூ மூலம் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் கூகுள் ஆன்ட்ராய்டு
வி4.0 ஐஸ் கிரீம் சான்ட்விச் தொழில் நுட்பத்தில் இயங்கும். மூங்கிலால் ஆன
ஸ்மார்ட்போன் என்பதால் இது அதிக எடை கொண்டதாக இருக்கும் என்று தோன்றும்.
ஆனால் இந்த ஸ்மார்ட்போன் ஆப்பிள் ஐபோன்-4எஸ் ஸ்மார்ட்போனில் பாதி எடையை
தான் கொண்டிருப்பதாக இந்த ஸ்மார்ட்போனை வடிவமைத்த வுட்ஹவுஸ் தெளிவாக
கூறுகிறது. அட்ஸெரோ ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று
தகவல்கள் கூறுகின்றன.
இந்த
புதிய ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்பட்டுள்ள தொழில் நுட்பம் பற்றி அதிக
தகவல்கள் வெளியாக இன்னும் கொஞ்சம் காத்திருக்க வேண்டி இருக்கிறது. ஆனால்
இந்த அற்புதமான வடிமைப்பை பெற்று இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்
வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெறும் என்று இதன் தோற்றத்தை
பார்க்கும் யாராலும் எளிதாக கூறிவிட முடியும்.
No comments:
Post a Comment